பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை - வளர்ச்சிக்கு நல்லது- ரஜினிகாந்த்


பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை - வளர்ச்சிக்கு நல்லது- ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 18 Sep 2019 7:23 AM GMT (Updated: 18 Sep 2019 7:34 AM GMT)

பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை வளர்ச்சிக்கு நல்லது. இந்தியை திணித்தால் தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  இந்தியை தென் இந்திய மாநிலங்களை  விட வட மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 

இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள  மாட்டார்கள்.  தூரதிர்ஷ்டவசமாக  நமது நாட்டில்  இந்தி மொழியை  பொதுவான மொழியாக கொண்டு வரமுடியாது என கூறினார்.

Next Story