மாநில செய்திகள்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் + "||" + A situation where low winds are occurring in the Bay of Bengal Heavy rains in 11 districts

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக, ஆந்திர கடலோரத்தை கடந்து தெலுங்கானா வரை  நீண்டுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.
இந்த சுழற்சி காரணமாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதே போன்று ஜெயங்கொண்டம், பூலாம்பாடியில் தலா 6 சென்டி மீட்டரும், அதிராம்பட்டினம், அரியலூர், திருவையாறு, திருமானூர், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய ஊர்களில் தலா 5 செ.மீ மழையும் பெய்து உளளது. எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூரில் இருந்து நாகை வரையுள்ள வடமாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.

சென்னை நகரில் அதிகபட்சமாக 93.2 டிகிரி பாரன்ஹீட் வரையிலும், குறைந்த பட்சமாக 77 டிகிரி பாரன்ஹீட் வரையிலும் வெப்பம் பதிவாகக் கூடும்.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, கடலில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, எண்ணூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று செயல்படும் : ஆட்சியர் அறிவிப்பு
சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
2. குன்னூர், கோத்தகிரியில் கனமழைக்கு வீடுகள் சேதம்; விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின
குன்னூர், கோத்தகிரியில் கனமழைக்கு வீடுகள் சேதம் அடைந்தன. விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
4. உத்தரபிரதேசத்தில் கனமழைக்கு 47 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழைக்கு ஒரே நாளில் 25 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழைக்கு ஒரே நாளில் 25 பேர் பலியாயினர்.