இந்தி திணிப்புக்கு எதிராக செப். 20-ல் நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ்


இந்தி திணிப்புக்கு எதிராக செப். 20-ல் நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 18 Sep 2019 1:35 PM GMT (Updated: 18 Sep 2019 1:35 PM GMT)

இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ல் நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக திமுக தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து, திமுக சார்பில், வருகிற 20 ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில்,  இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்த இருந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க ஸ்டாலின் இந்த தகவலை தெரிவித்தார்.  

மு.க. ஸ்டாலின் கூறுகையில், “மத்திய அரசு எந்த வகையிலும் இந்தியை திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளார். இந்தி விவகாரத்தில் அமித்ஷாவின் விளக்கம் திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஆளுநர் உறுதியை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக ஆளுநர் கூறினார். இந்தி திணிப்பை என்றுமே நாங்கள் எதிர்ப்போம்” என்றார். 

Next Story