மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும் + "||" + Showers will continue for the next 3 days in TamilNadu and Puducherry

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் கூறி உள்ளது.
சென்னை

தென்மண்டல வானிலைத் துறை தலைவர்  பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை இடைவெளிவிட்டு லேசான மழை பெய்யும்.

அடுத்த இருதினங்களுக்கு மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்லவேண்டாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு மழை தொடர வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

திருவள்ளூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், அரியலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கனமழை பெய்யும் என கூறினார்.