மாநில செய்திகள்

ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ். சீட்: நீட் தேர்வை இனியும் தொடர அனுமதிப்பதா? மு.க.ஸ்டாலின் டுவீட் + "||" + Allowing the NEET to Continue Examination? Stalin

ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ். சீட்: நீட் தேர்வை இனியும் தொடர அனுமதிப்பதா? மு.க.ஸ்டாலின் டுவீட்

ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ். சீட்: நீட் தேர்வை இனியும் தொடர அனுமதிப்பதா? மு.க.ஸ்டாலின் டுவீட்
ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்க வழிசெய்யும் நீட் தேர்வை இனியும் தொடர அனுமதிப்பதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக உதித்சூரியா வீட்டில்  போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், மேலும் 4 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அரசு மருத்துவர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை சரி பார்க்க மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வழங்கும்  நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?  மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்! என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக அநீதியை நான் கண்டிக்கிறேன் - மு.க.ஸ்டாலின் டுவீட்
இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.