மாநில செய்திகள்

சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் - மத்திய அரசு தகவல் + "||" + Monitor social networks Find out the wrong information union Government Information

சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் - மத்திய அரசு தகவல்

சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் - மத்திய அரசு தகவல்
சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
சென்னை,

சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கோரிய வழக்கு  சென்னை  ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது ட்விட்டரில் தவறான செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.  தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் போலி கணக்குகள் மீது ட்விட்டர் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை  எடுத்து உள்ளது. உலகம் முழுவதும், செய்திகளை வழங்கி வந்த ஆயிரக்கணக்கான போலி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளன என ட்விட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது என நீதிபதிகள் அதிரடி கேள்வி எழுப்பினர்.  தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது. வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்திய சட்டத்தை பின்பற்ற வேண்டும்  என நீதிபதிகள் தெரிவித்தனர்.

"சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம்" கொண்டு வரப்படும் என  சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது 

ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கு அக்டோபர் 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம் என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
2. 8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து
8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
3. சமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு: ராகுல் காந்தி கருத்து
சமூக வலைதளங்களில் இருந்து பிரதமர் மோடி விலக உள்ளதாக வெளியான தகவல் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
4. சமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு?
சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. சசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை தான் - ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்
சசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை தான் என ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.