வெங்காய விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.60 பொதுமக்கள் அதிர்ச்சி


வெங்காய விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.60 பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 21 Sep 2019 5:52 AM GMT (Updated: 21 Sep 2019 5:52 AM GMT)

சென்னை உள்பட தென் மற்றும் வட மாநிலங்களில் வெங்காயம் விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது.

சென்னை

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லசல்காவோனில்  நாட்டிலேயே மிகப்பெரிய மொத்த விலை வெங்காய சந்தை அமைந்துள்ளது. இங்கு வெங்காயத்தின் விலை ஒரு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்தது. இது 4 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும்.

சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 35 ஆக விற்கப்பட்ட நிலையில் இன்று திடீரென விலை உயர்த்தப்பட்டு ரூ.60 ஆக விற்கப்பட்டு வருகிறது.

முன்பு ஒரு மூட்டை வெங்காயத்தின் விலை ரூ.1400 ஆக விற்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரு மூட்டையின் விலை ரூ.2200 முதல் ரூ. 2500 வரை விற்கப்படுகிறது. இதனால்  வெங்காயத்தின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வெங்காயத்திற்கான பற்றாக்குறையினால்தான் இந்த விலை உயர்ந்திருப்பதாக மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story