மாநில செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார் + "||" + All arrangements for the by-election in Vikravandi, Nankuneri

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
சென்னை

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். 

நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து நெல்லை ஆட்சியர் கூறியதாவது:-

வாக்காளர்களுக்கு உதவ செயலி பயன்படுத்தப்படும். நாங்குநேரி தொகுதியில் 2.56 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக 3 பேர் நியமிக்கப்படுவர். 30 பறக்கும் படைகள், 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். நெல்லை மாவட்டம் முழுவதும் நடத்தை விதிகள் பொருந்தும். நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகள் உள்ளன என கூறினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் கூறியதாவது:- 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் வீடியோ பதிவுமூலம் கண்காணிக்கப்படும். விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடியில் 2,23,387 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21-ம் தேதி பொதுவிடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. நாங்குநேரி-விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
3. விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தல்: தே.மு.தி.க. போட்டியிடுமா? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுமா? என்பது குறித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பூரில் கருத்து தெரிவித்தார்.
4. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந்தேதி இடைத்தேர்தல்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
5. தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்
தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. #MakkalYaarPakkam #ElectionsWithThanthiTV