நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது


நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
x
தினத்தந்தி 22 Sep 2019 5:10 AM GMT (Updated: 22 Sep 2019 5:10 AM GMT)

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது.

சென்னை,

டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா நேற்று செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு அக்டோபர் 21ந்தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.  இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ந்தேதி நடைபெறும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

இதனுடன், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.  தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.  தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலில் வந்தன.

இடைத்தேர்த்லுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி 30ந்தேதி முடிவடைகிறது.  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்றும், நாளையும் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என்றும், வேட்பாளர் நேர்காணல் நாளை நடைபெறும் என்றும் அ.தி.மு.க. கட்சி தலைமை அறிவித்து இருந்தது.

இதன்படி, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது.

நாங்குநேரி தொகுதியில் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் முன்னாள் எம்.பி. ஆர். லெட்சுமணன் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்கின்றனர்.

Next Story