ஜம்மு காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினர் அதிகபட்ச உஷார் நிலையில் உள்ளனர் -ராணுவ தலைமை தளபதி


ஜம்மு காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினர் அதிகபட்ச உஷார் நிலையில் உள்ளனர் -ராணுவ தலைமை தளபதி
x
தினத்தந்தி 23 Sep 2019 6:37 AM GMT (Updated: 23 Sep 2019 6:37 AM GMT)

ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடந்து ராணுவத்தினர் அதிகபட்ச உஷார் நிலையில் உள்ளனர் என சென்னையில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.

சென்னை,

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்ற இளம் ராணுவ வீரர்கள் புதிய பிரிவு  தொடக்க விழா
நிகழ்ச்சிக்கு பின், இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் அவர்களை இயக்குகிற பாகிஸ்தானியர்களுக்கும் இடையேயான தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில், தகவல் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை.

எல்லைகளை கையாளுவதில் நாடுகளிடையே வேறுபாடு உள்ளது. பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்காகவே போர்நிறுத்த ஒப்பந்தங்களை பாகிஸ்தான் மீறி வருகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடந்து ராணுவத்தினர் அதிகபட்ச உஷார் நிலையில் உள்ளனர். எல்லைகளை கையாளுவதில் நாடுகளிடையே வேறுபாடு உள்ளது.

குறைந்தது 500 ஊடுருவல்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருந்தன, புள்ளிவிவரங்கள் அவ்வப்போது மாறுபடும்.

சீர்குலைவை உருவாக்க விரும்பும் சிலரால் இஸ்லாத்தின் விளக்கம் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு செல்வதாக நான் உணர்கிறேன். இஸ்லாத்தின் சரியான அர்த்தத்தை வெளிப்படுத்தும் போதகர்கள் நம்மிடம் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பாலகோட்டை பாகிஸ்தான் மீண்டும் சீரமைத்தது மிக சமீபத்தில் தான். இது பாலகோட் பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது என கூறினார்.

Next Story