மாநில செய்திகள்

அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி + "||" + Onion prices to be reduced in Tamil Nadu over the next three days

அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி

அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி
அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
சென்னை

சென்னையில், வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் துறைசார்ந்த அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் தனியாரிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்த விலையில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. விலை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில் வெங்காய விலை தொடர்பான நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெங்காயத்தின் விலை அடுத்த 2 அல்லது 3 நாட்களில் குறையும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

வெங்காயம் பதுக்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து அதிக அளவு வெங்காய லாரிகள் சென்னை வரத்தொடங்கி உள்ளன.

வெங்காயம் விலை குறையவில்லை என்றால் தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவமழை ஆய்வு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு உத்தரவு
வடகிழக்கு பருவமழையை கண்காணிக்கவும், ஆய்வு பணிகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உள்ளது.
2. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
3. வெங்காயம் கிலோ ரூ.22 -அலைமோதும் கூட்டம்
ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய் என்ற விலையில் டெல்லியில் விற்கப்படுகிறது. டெல்லி முழுவதும் மக்கள் வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.
4. கூவம் நதி மாசு அடைந்த விவகாரம்: தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்டு
கூவம் நதி மாசு அடைந்த விவகாரத்தில் தமிழக அரசு ரூ.100 கோடி அபராத தொகையை செலுத்த தேவையில்லை என கூறி அரசின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.
5. தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.