சென்னை கொரட்டூரில் விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னை கொரட்டூரில் விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சென்னை,
விழுப்புரம் மாவட்டம் குயிலாபாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32) பிரபல தாதா. இவர் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் தாதா மணிகண்டன் கொரட்டூரில் பதுங்கி இருப்பதாக விழுப்புரம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கொரட்டூர் விரைந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை கைது செய்ய முற்பட்ட போது ஆரோவில் எஸ்.ஐ., பிரபு மீது ரவுடி மணிகண்டன் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தாதா மணிகண்டனை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். கத்திக்குத்துக்கு உள்ளான எஸ்.ஐ.,க்கள் பிரபு, தனிப்படை எஸ்.ஐ., பிரகாஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story