தேச பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வீழ்த்தும் திறமையுடன் படை வீரர்கள் உள்ளனர்; ராஜ்நாத் சிங் பேச்சு


தேச பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வீழ்த்தும் திறமையுடன் படை வீரர்கள் உள்ளனர்; ராஜ்நாத் சிங் பேச்சு
x
தினத்தந்தி 25 Sep 2019 6:09 AM GMT (Updated: 2019-09-25T11:39:57+05:30)

தேச பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வீழ்த்தும் திறமையுடன் படை வீரர்கள் உள்ளனர் என ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

சென்னை,

சென்னையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்திய கடலோர காவல் படையின் வராஹா என்ற ரோந்து கப்பலின் இயக்க பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

பஞ்சாப் முதல் மந்திரி மத்திய உள்துறை மந்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,, பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் மற்றும் எறிகுண்டுகள் எல்லை பகுதியில் எறியப்பட்டு உள்ளன என்பது பற்றி தெரிவித்து உள்ளார்.  இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த சிங், பாகிஸ்தான் நாட்டின் ராணுவம், விமான படை அல்லது கப்பற்படை என எதுவாக இருப்பினும் தேச பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வீழ்த்தும் திறமையுடன் படை வீரர்கள் உள்ளனர் என கூறினார்.

இதேபோன்று பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வந்த பாலகோட் பகுதியை அந்நாடு மீண்டும் திறந்துள்ளது.  நாம் இதற்கு என்ன செய்ய போகிறோம்? என்ற கேள்விக்கு, கவலைப்பட வேண்டாம்.  நமது படைகள் முழு அளவில் தயாராக உள்ளன என்று கூறினார்.

Next Story