நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு; அமைச்சர்கள் சந்திப்புக்கு பிறகு சரத்குமார் அறிவிப்பு


நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு; அமைச்சர்கள் சந்திப்புக்கு பிறகு சரத்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Sep 2019 11:21 PM GMT (Updated: 2019-09-26T04:51:46+05:30)

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆலோசனைப்படி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், பி.தங்கமணி ஆகியோர் நேற்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமாரை நேரில் சந்தித்தனர். அப்போது, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன் அடிப்படையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்குழு விவரமும், பிரசார தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story