உள்ளாட்சி அமைப்புக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் - தேர்தல் ஆணையம் தகவல்


உள்ளாட்சி அமைப்புக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் - தேர்தல் ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 26 Sep 2019 12:19 AM GMT (Updated: 2019-09-26T05:49:30+05:30)

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை, 

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற விரும்பும் வாக்காளர்கள், முதலில் தாங்கள் சார்ந்திருக்கும் சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கவேண்டும். அதற்காக தொடர்புடைய சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரியிடமோ அல்லது http://www.nvsp.in என்ற இணையதள முகவரி மூலமாகவோ சேர்க்கலாம்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாதவர்கள் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர் அல்லது வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். சென்னையை பொறுத்தவரையில் மண்டல அலுவலகம் அல்லது தலைமை அலுவலகத்தில் (ரிப்பன் மாளிகை) உள்ள தேர்தல் பொதுப்பிரிவிலோ விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 2020-ம் ஆண்டுக்கான சிறப்பு முகாம்களுக்கும் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு-நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்டவற்றை செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story