தேனியை தொடர்ந்து கோவையிலும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம்?


தேனியை தொடர்ந்து கோவையிலும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம்?
x
தினத்தந்தி 26 Sep 2019 3:11 AM GMT (Updated: 2019-09-26T08:41:26+05:30)

தேனியை தொடர்ந்து கோவையிலும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்து 2 மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.

கோவை,

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்த்த போது, கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 2 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு, சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி புகார் கடிதம் அளித்துள்ளது. நீட் நுழைவுத்தேர்வு புகைப்படத்திற்கும், அனுமதி கடித புகைப்படத்திற்கும் வித்தியாசம் உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லுாரியில்  சேர்ந்த உதித் சூர்யா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எழுப்பப்பட்டுள்ள இந்த புகார் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story