சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.28,776க்கு விற்பனை


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.28,776க்கு விற்பனை
x
தினத்தந்தி 26 Sep 2019 5:45 AM GMT (Updated: 2019-09-26T11:15:35+05:30)

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.28,776க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து கடந்த 4ந்தேதி சவரன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது.  இதனால் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.30,120க்கு அன்று விற்பனையானது.  40 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,640 அதிகரித்து இருந்தது.

இதன்பின்பு அன்று மாலையில் விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 928க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த நிலையில், தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு இன்று ரூ.45 குறைந்து உள்ளது.  இதனால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.28,776க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story