மாநில செய்திகள்

நாங்குநேரி-விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலின் பிரசாரம் + "||" + Nanguneri-Vikravandi constituency by election MK Stalin Campaign

நாங்குநேரி-விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலின் பிரசாரம்

நாங்குநேரி-விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தி போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா.புகழேந்தியையும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்து மு.க.ஸ்டாலின் 10 நாட்கள் 2 கட்டங்களாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். 

அதன்படி, அக்டோபர் மாதம் 3, 4-ந் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும், அதைத்தொடர்ந்து, 5, 6-ம் தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். 

பின்னர் அக்டோபர் 12, 13, 14-ந் தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும்,  அக்டோபர் 17, 18, 19-ம் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் 2-ம் கட்ட  பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மொத்தமாக 2 தொகுதிகளிலும் 10 நாட்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.