370 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


370 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 26 Sep 2019 6:41 AM GMT (Updated: 2019-09-26T12:11:06+05:30)

சென்னை தலைமை செயலகத்தில் 370 புதிய அரசு பேருந்துகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.109 கோடியில் 370 புதிய அரசு பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அரசு பேருந்து சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த பேருந்துகள் சென்னை, சேலம்,  கும்பகோணம், மதுரை, விழுப்புரம், நெல்லை ஆகிய  கோட்டங்களுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கும் (65 பேருந்துகள்) வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story