காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிமுக முழு ஆதரவு - ஓபிஎஸ்


காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிமுக முழு ஆதரவு - ஓபிஎஸ்
x
தினத்தந்தி 26 Sep 2019 1:40 PM GMT (Updated: 2019-09-26T19:10:36+05:30)

அதிமுக கூட்டணியில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது.

சென்னை, 

புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியில்  அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில்,  என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.  

இந்த சந்திப்புக்கு பிறகு  தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று  துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Next Story