டெல்லியில் அவசர அழைப்புகளுக்கு ஒரே எண் சேவை தொடக்கம்


டெல்லியில்  அவசர அழைப்புகளுக்கு ஒரே எண் சேவை தொடக்கம்
x
தினத்தந்தி 26 Sep 2019 2:25 PM GMT (Updated: 26 Sep 2019 2:25 PM GMT)

டெல்லியில் ஒரே அவசர அழைப்பு எண் 112 -ஐ உள்துறை இணை மந்திரி ஜி கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

டெல்லி,

டெல்லியில் ஒரே அவசர அழைப்பு  எண் 112 ஐ உள்துறை இணை  மந்திரி ஜி கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார். ஒரே அவசர அழைப்பு  எண் 112 முறையை அமல்படுத்தியதன் மூலம், காவல்துறை பதிலளிக்கும் நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது என கூறினார்.

இந்த புதிய அமைப்பின் மூலம் அவசர அழைப்பு அழைக்கும் போது நேரடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்கிறது. யாராவது 100 அல்லது 101 அல்லது 102 ஐ டயல் செய்து அழைத்தால் அந்த அழைப்பு 112 உடன் இணைக்கப்படும்" என்று  மூத்த போலீஸ் அதிகாரி ஒரூவர் கூறினார். டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் நகரில் தலைமை அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது இந்த அமைப்பு  டி.சி.பி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்றும் டெல்லியில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே எண்ணை டயல் செய்வதன் மூலம் மூன்று அவசர சேவைகள் (போலிஸ், தீயணைப்பு சேவைகள் மற்றும் ஆம்புலன்ஸ்) வசதியைப் பெற முடியும் என்று போலீசார் தெரிவித்தார்.

தெருக் குற்றங்களைத் தடுப்பதில் டெல்லி காவல்துறையின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், இந்த முயற்சிகள் நகரத்தையும் குடிமக்களையும் பாதுகாப்பானதாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story