மொழி ஒரு தொடர்பியல் கருவிதான், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது - கமல்ஹாசன் பேச்சு
மொழி ஒரு தொடர்பியல் கருவிதான், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று கமல்ஹாசன் பேசினார்.
சென்னை,
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-
மொழி ஒரு தொடர்பியல் கருவி தான், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது. ஓட்டலில் நாம் என்ன உணவை உண்ண வேண்டும் என்பதை ஓட்டல் நிர்வாகம் முடிவு செய்யக்கூடாது. கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால் தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது. மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்கக்கூடாது.
அரசியல் பேசாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது. இதை உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்ல வேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும். இருபது வருடங்களாக சினிமாவை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று கூவிக் கொண்டு இருக்கிறேன்.
தமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
சமூக பிரச்சினை உள்ளவர்களாக மாணவர்களை மாற்றும் வல்லமை கொண்ட ஒன்றாக ஊடகம் மாறி விட்டது, அந்த சாட்டையை மாணவர்கள் கையில் எடுத்து சுழற்ற வேண்டிய காலம் வந்து விட்டது.
குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தை பெரிதுப்படுத்திக் கொள்வேன். இளைஞர்களே என்னுடைய குடும்பம், இளைஞர்களே நாளைய தலைவர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story