நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ரூ.91 கோடி சொத்து


நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ரூ.91 கோடி சொத்து
x
தினத்தந்தி 1 Oct 2019 2:16 PM IST (Updated: 1 Oct 2019 2:16 PM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 91 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்து 632 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாங்குநோி தொகுதி இடைத்தோ்தல் 21-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன், அதிமுக நாராயணன், நாம் தமிழா் ராஜநாராயணன் உட்பட 37 போ் 46 மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனின் சொத்து மதிப்பு 91 கோடி ரூபாய் என அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபி மனோகரனுக்கு சொந்தமாக 23 கோடியே 11 லட்சத்து 98 ஆயிரத்து 65 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அவரது அசையா சொத்தின் மதிப்பு 18 கோடியே 64 லட்சத்து 23 ஆயிரத்து 245 ரூபாய் என்றும், குடும்ப உறுப்பினர்களின் சொத்து 49 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 322 ரூபாய் எனவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 91 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்து 632 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

அவருக்கு அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் உள்ளார். அவருக்குச் சொந்தமாக 10 லட்சத்து 9 ஆயிரத்து 680 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசையா சொத்துகளின் மதிப்பு 86 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் என்றும், குடும்ப உறுப்பினர்கள் சொத்துகளின் மதிப்பு 31 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் என்றும் தனது வேட்புமனுவில் நாராயணன் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக ஒரு கோடியே 28 லட்சத்து 72 ஆயிரத்து 680 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக நாராயணன் கூறியுள்ளார்.

நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணனுக்கு 32 லட்சத்து 37 ஆயிரத்து 373 ரூபாய் சொத்துகள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story