இலங்கை கடற்படையால் 2 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர்


இலங்கை கடற்படையால் 2 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 1 Oct 2019 9:33 AM GMT (Updated: 1 Oct 2019 10:28 AM GMT)

இலங்கை கடற்படையால் 2 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதாக மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

2,000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இந்திய கடலில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு துரத்தப்பட்டதாக மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் திங்கள்கிழமை கடலில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை வீரர்கள் இந்திய கடலுக்குள் நுழைந்து அவர்களை விரட்டியடித்ததாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் பி.சேசுராஜா தெரிவித்தார்.  10 படகுகளையும் மீன்பிடி வலைகளையும்  அவர்கள் பறித்து கொண்டனர்.

இதனால் மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

செப்டம்பர் 14 ஆம் தேதி இங்கிருந்து நான்கு மீனவர்கள் இலங்கை  கடற்படையால்   நெடுந்தீவு அருகே  கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story