பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை,
பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது. நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
இவர்களது வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது. தமிழக அரசின் மனுவை வரும் அக்.3 ஆம் தேதி விசாரிக்க உள்ளது. தமிழக அரசின் மனு தொடர்பாக டிராபிக் ராமசாமி உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story