நினைவுநாள்: காமராஜர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி


நினைவுநாள்: காமராஜர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 3 Oct 2019 4:30 AM IST (Updated: 3 Oct 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

காமராஜர் நினைவு நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 45-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவருடைய நினைவு மண்டபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று காமராஜர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ, ஈ.சி.சேகர் உள்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏ.தர்மராஜ், கல்பாக்கம் த.மோகன், ஜோ.ஆசைத்தம்பி, எம்.ஆர்.சிவகுமார், ஜி.சந்தானம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, தேசிய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், மாவட்ட தலைவர் வீரபாண்டியன், எஸ்.சி.துறை மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நிர்வாகிகள் கோவைத்தங்கம், விடியல் சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என்.அசோகன், கொட்டிவாக்கம் ஏ.முருகன், சைதை மனோகரன் உள்பட நிர்வாகிகள், பா.ஜ.க. சார்பில் துணைத்தலைவர் எம்.என்.ராஜா தலைமையில் மாநில செயலாளர் கரு.நாகராஜன், மாதவி பாஸ்கரன், செந்தில் ம.பொ.சி. உள்பட நிர்வாகிகள், பா.ம.க. சார்பில் துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் வே.வடிவேல், கோபி உள்பட நிர்வாகிகளும் மலர் வளையம், மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் செந்தமிழன், சவுந்திரபாண்டியன் உள்பட நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் எஸ்.எஸ்.பாலாஜி, வி.கோ.ஆதவன், ந.செல்லதுரை உள்பட நிர்வாகிகளும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அன்பு தென்னரசன், ராஜேந்திரன், அமுதாநம்பி ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தலைமையில் எம்.ஏ.சேவியர், ஜெ.டிக்சன் ஆகியோரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் தலைமையில் நிர்வாகிகள், தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, சென்னை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் கராத்தே ஆர்.தியாகராஜன், தி.மு.க. பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், திரைப்பட சண்டை பயிற்சி நிபுணர் ஜாக்குவார் தங்கம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன், பொதுச்செயலாளர் கே.சுந்தரேசன் ஆகியோர் தலைமையில் 100 பேருக்கு இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் காமராஜர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின், இலவச சேலைகளை வழங்கினார்.

நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன், தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் த.ரவி, சென்னை நாடார் சங்க தலைவர் பி.கரண்சிங் நாடார், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, மாநிலத்தலைவர் ஆ.மணியரசன், பொதுச்செயலாளர் தாமோதரன், காமராஜர் பேத்தி டி.எஸ்.கே.மயூரி, ‘காமராஜ்’ பட இயக்குனர் பாலகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். காமராஜர் நினைவிடத்தில் தரமணி நாடார் சங்கம் மற்றும் கடம்பூர் நாடார் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற சட்ட ஆலோசகரும், ஐகோர்ட்டு வக்கீலுமான ஆ.ஆறுமுகநயினார் பொதுமக்களுக்கு மரக் கன்றுகளும், குடிநீர் பாட்டில்களையும் வழங்கினார். இதில் போரூர் நாடார் சங்க தலைவர் வி.ஆனந்தராஜ், தே.மு.தி.க. வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல நெல்லை- தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க செயலாளர் கொட்டிவாக்கம் முருகன் ஏற்பாட்டில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதேபோல், சென்னை தியாகராயநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திலும் அவருடைய சிலைக்கு கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சிலர் அன்னதானமும் வழங்கினர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவுநாளையொட்டி, அவர்களது உருவப்படத்துக்கு கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Next Story