சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை இடையூறின்றி பேனர் வைக்க சென்னை ஐகோர்ட் அறிவுரை
சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை இடையூறின்றி பேனர் வைக்க சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது.
சென்னை,
பிரதமர் மோடி - சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய-மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடும்போது,
சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க 16 இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது. பேனர் வைக்க அனுமதி கேட்டு மத்திய அரசும் மனு அளித்துள்ளது
சட்டவிதிகளை பின்பற்றி பேனர் வைக்க தடை ஏதும் இல்லை. சட்ட விரோதமாக பேனர் வைக்க அரசியல் கட்சிகளுக்கு தான் தடை உள்ளது. சட்ட விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படும் என கூறினார்.
டெல்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் பேனர் வைக்கப்படுமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
டெல்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படும் என பேனர் பிரிண்டர்ஸ் சங்கம் தரப்பு வழக்கறிஞர் ஞானதேசிகன் கூறினார்.
பேனர் வைக்க தடை விதிக்கும் அதிகாரிகளே பேனர் வைக்க அனுமதி கேட்டு வந்துள்ளனர். விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதே திமுகவின் வாதம். சீனாவிற்கும் தமிழகத்திற்கும் தொடர்பு உள்ளது என திமுக சார்பில் வாதிடப்பட்டது.
சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை இடையூறின்றி பேனர் வைக்க சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது. உரிய கட்டுமானம் மற்றும் அஸ்திவாரத்துடன் பேனர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story