காந்தி உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியை பார்த்து ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார் - நாராயணசாமி
காந்தி உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியை பார்த்து ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார் என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரையில் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ் பற்றி மோடி பேசுவதும், ஒரே மொழி பற்றி அமித்ஷா பேசுவதும் பாஜகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க நீதிமன்ற உத்தரவை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும்.
ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே வரி, ஒரே மதம் என்ற மோடியின் கனவு எக்காலத்திலும் நிறைவேறாது. மோடி ஆட்சியில் மட்டும் 6 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். காந்தி உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியை பார்த்து ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story