6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சேலம், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், தென் தமிழகம் அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளதால் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக கூடும் என கூறியுள்ளது.
Related Tags :
Next Story