ராதாபுரம் தொகுதி: மறுவாக்கு எண்ணிக்கை நாளை காலை நடைபெறும் - சென்னை உயர்நீதிமன்றம்
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை,
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கையை தடை செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளராக நின்ற இன்பதுரை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.
பின்னர் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் என உத்தரவிட்டது.
மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய அ.தி.மு.க எம்.எல்.ஏ. இன்பதுரையின் மனுவை தள்ளுபடி செய்து, பட்டியலில் வரும்போது விசாரணைக்கு ஏற்கப்படும் எனக்கூறி அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Related Tags :
Next Story