நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் அறிவிப்பு
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை,
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன், தி.மு.க. வேட்பாளராக புகழேந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நாராயணன், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் நிற்கிறார்கள். நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர்.
இந்த இடைத்தேர்தல்களில் ஆளும் அதிமுகவுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் கடும் போட்டி நிலவும் எனத்தெரிகிறது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட உள்ளனர். இந்த சூழலில், முதல் அமைச்சர் பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயணம் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியில் வரும் 12, 13, 16-ம் தேதிகளிலும், விக்கிரவாண்டியில் 14, 15, 18-ம் தேதிகளிலும் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
Related Tags :
Next Story