கண்டலேறுவில் இருந்து பூண்டி வரை குழாய்: அ.தி.மு.க. அரசு நிராகரித்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நினைப்பது ஏன்? முதல்-அமைச்சருக்கு, துரைமுருகன் கேள்வி
கண்டலேறுவில் இருந்து பூண்டி வரை குழாய் அமைப்பதை ஏற்கனவே நிராகரித்துவிட்டு மீண்டும் அதனை செயல்படுத்த நினைப்பது ஏன்? என்று முதல்-அமைச்சருக்கு, துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 1-ந்தேதி சென்னை கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
அதாவது, ‘கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர் வரும் கால்வாய் அடிக்கடி சேதம் அடைகிறது. அதை தவிர்க்க, கண்டலேறுவில் இருந்து பூண்டி வரை குழாய் அமைக்க ஆலோசித்து வருகிறோம்’ என்பதுதான் அந்த திட்டம்.
முதல்-அமைச்சர் இந்த திட்டம் குறித்து முழுவிவரம் அறிந்து பேசினாரா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இது அவரது சிந்தனையில் உதித்த திட்டம் அல்ல.
ஸ்ரீசைலம் முதல் பூண்டி வரை கிருஷ்ணா நீரை கொண்டு வருவதற்கு பல திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு, இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுதான் கால்வாய் மூலம் நீரை கொண்டு வருவது என்பது. இந்த திட்டத்திற்கு அன்று ஒப்புதல் கையொப்பமிட்டது அ.தி.மு.க. அரசு தான்.
இந்த திட்டம் நிறைவேறிய பிறகும் குறிப்பாக, கண்டலேறு முதல் பூண்டி ஏரி வரை உள்ள கால்வாய் அடிக்கடி பழுதடைந்தும், நீர் சேதாரமும் ஏற்பட்டு வந்தது. இதனால் பூண்டிக்கு வரும் நீர் குறைந்து கொண்டே வந்தது.
இந்த நிலையை அறிந்த புட்டபர்த்தி சாய்பாபா, சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க அவராகவே முன்வந்து கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்வதோடு, அதற்காக ஆகும் செலவையும் தானே ஏற்றுக்கொள்ளுவதாகவும் அறிவித்தார்.
ஆனால், அ.தி.மு.க. அரசு இந்த திட்டத்தை ஏற்க முடியாது என்று அறிவித்துவிட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், கண்டலேறு முதல் பூண்டி வரை நிலச்சரிவு சரியாக இல்லை.
எனவே, குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்வது சிரமம். தண்ணீர் சரியாக கிடைக்காது என்பதாகும். இந்த விவரமெல்லாம் கற்பனை கதை அல்ல.
முதல்-அமைச்சர் விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், தமிழக அரசு வெளியிட்டிருக்கின்ற ‘பேராசிரியர் மோகனகிருஷ்ணன் எழுதிய ‘சென்னை நகருக்கு கிருஷ்ணா நதிநீர் வினியோக திட்டம் குறித்த வரலாறு’ என்ற நூல் எடுத்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
முதல்-அமைச்சரிடம் நான் தெரிந்து கொள்ள விரும்புவது எல்லாம், கண்டலேறு முதல் பூண்டி வரை நிலச்சரிவு சரி செய்யப்பட்டு விட்டதா? இன்றைக்கு அந்த திட்டத்தை அறிவித்திருப்பதும் அ.தி.மு.க. அரசு தான். அன்று, இதே திட்டத்திற்கு மறுப்பு சொன்னதும் இதே அ.தி.மு.க. அரசு தான்.
சத்யசாய்பாபா சொன்னபோது அ.தி.மு.க. அரசு ஒத்துபோயிருந்தால், அரசுக்கு பணமும் மிச்சம், திட்டமும் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்கும். 15 ஆண்டுகளாக தட்டுப்பாடின்றி தண்ணீரும் வந்திருக்கும். இன்றைய நிலவரப்படி, இந்த திட்டத்தை நிறைவேற்ற சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். ரூ.3 ஆயிரம் கோடியா? நல்ல வேட்டை! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story