அரசு பேனர் வைத்தால் கீழே விழாதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி
அரசு பேனர் வைத்தால் கீழே விழாதா? என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சி,
சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்தி சிதம்பரம் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பேனர் வைக்க அரசு அனுமதி கேட்டதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விசித்திரமானது. அரசு பேனர் வைத்தால் கீழே விழாதா? எதிர்க்கட்சிகள் செயல்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசு இப்படி செயல்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய அரசு கைது செய்வது வாடிக்கையாகி விட்டது. பாஜகவை எதிர்ப்பவர்கள் பாஜகவில் சேர்ந்தால் புனிதமாகி விடுவார்கள் என நினைக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடியை வரவேற்று 'பேனர்' வைக்க அ.தி.மு.க. அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேநேரத்தில் 'மத்திய, மாநில அரசு பேனர் வைத்தால் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story