திருச்சி நகைக்கடை கொள்ளையனை பிடித்த திருவாரூர் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு
திருச்சி நகைக்கடை கொள்ளையனை பிடித்த திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்டிடத்துக்குள் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அடையாளம் காணமுடியாத அளவிற்கு முகமூடி, கையுறை அணிந்து, உடல் முழுவதும் மூடப்பட்ட உடை அணிந்திருந்தது தெரியவந்தது. கொள்ளையர்கள் எவ்வித அடையாளத்தையும், சிறிய தடயத்தையும்கூட விட்டு வைக்காமல் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொள்ளையில் வடமாநிலக் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீஸார் கருதி அதை நோக்கி விசாரணை நகர்ந்த நிலையில் நேற்று நடந்த வாகனச் சோதனையில் திருவாரூர் அருகே மடப்புரம் மணிகண்டன் என்பவர் சிக்கினான். ஆனால் அவருடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் என்பவர் தலைமறைவானார்.
இதனையடுத்து இன்று நகைக்கடை கொள்ளையில் தப்பியோடிய சீராதோப்பு சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளான். திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகை கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2-வது நாளில் குற்றவாளிகள் பிடிபட்டனர்.
இந்நிலையில் இச்சம்வம் தொடர்பான வழக்கில் சிறப்பாக செயல்பட்டு திருச்சி நகைக்கடை கொள்ளையனை பிடித்த, திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு உள்ளிட்டோருக்கு, திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்.
Related Tags :
Next Story