பராமரிப்பு பணி: செங்கல்பட்டு-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
* விழுப்புரம்-தாம்பரம்(வண்டி எண்: 56060) இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் வருகிற 10-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 8-ந்தேதி வரை செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.
* செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பயணிகள் வசதிக்காக வருகிற 10-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 8-ந்தேதி வரை காலை 9.15 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.
* சென்னை எழும்பூர்-கயா(12390) இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15, 22, 29-ந்தேதி, நவம்பர் மாதம் 5, 12, 19, 26-ந்தேதி, டிசம்பர் மாதம் 3-ந்தேதிகளில் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பதிலாக எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும்.
* மறுமார்க்கமாக கயா-எழும்பூர்(12389) இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 13, 30, 27-ந்தேதி, நவம்பர் மாதம் 3, 10, 17, 24-ந்தேதி, மற்றும் டிசம்பர் மாதம் 1-ந்தேதிகளில் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பதிலாக சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story