சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு: ஒரு பெண் உள்பட 8 திபெத்தியர்கள் கைது
சீன அதிபர் வருகையின் போது போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த ஒரு பெண் உள்பட 8 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சீன அதிபர் சென்னை வருகையின் போது போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக வந்த தகவலை அடுத்து ஒரு பெண் உள்பட 8 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள திபெத் நாட்டினர் குறித்து போலீசார் கணக்கெடுப்பு நடத்தி கண்காணித்தனர். இந்நிலையில் கிழக்கு தாம்பரத்தில் திபெத் கொடியுடன், சீன அதிபர் வருகை எதிர்ப்பு வாசகங்கள் எழுதுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த 2 மாணவர்கள், ஒரு பெண் உட்பட 8 திபெத்தியர்களை பிடித்து விசாரித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்போடு மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் 8 பேரையும் ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி திவ்யா தயானந்த் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். 18-ந் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story