சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.43க்கும், டீசல் விலை ரூ.70.57க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி தொடர் பண்டிகை கொண்டாட்டங்களிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 6 நாளாக குறைந்து வந்த நிலையில் இன்று அதே விலை நீடிக்கிறது.
Related Tags :
Next Story