மாநில செய்திகள்

ரெயில்வேயின் சென்னை மண்டலத்தில் ஒரு எலியை பிடிக்க ரூ.22 ஆயிரம் செலவு + "||" + To Tackle Rat Menace, Chennai Railway Division Spends Rs 22k on Trapping One Rodent

ரெயில்வேயின் சென்னை மண்டலத்தில் ஒரு எலியை பிடிக்க ரூ.22 ஆயிரம் செலவு

ரெயில்வேயின் சென்னை மண்டலத்தில் ஒரு எலியை பிடிக்க ரூ.22 ஆயிரம் செலவு
ஒரு எலியை பிடிக்க சராசரியாக ரூ.22 ஆயிரம் செலவு செய்து உள்ளது. மூன்று வருடங்களில் மட்டும் பெரும் தொகையாக ரூ.5.89 கோடி செலவு செய்துள்ளது.
சென்னை

இந்திய ரெயில்வேயின் சென்னை மண்டலம் ஒரு எலியை பிடிக்க 22,300 ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ளது.
 
இதில் என்ன ஆச்சரியம் என்றால்  ரெயில்களில் எலிகளைப் பிடிக்க கடந்த மூன்று வருடங்களில் மட்டும் பெரும் தொகையாக ரூ.5.89 கோடி செலவு செய்துள்ளது.

ஜூலை 17-ம் தேதி தகவல் அறியும்  சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில் அறிக்கையில் சென்னை மண்டல ரெயில்வே சில வருடங்களாகவே எலித் தொல்லையால் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும், அவை பல சேதங்களை செய்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அதிகாரிகளும் எலிகளை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது மே மாதம் 2016 தொடங்கி ஏப்ரல் 2019 ஆண்டு வரை எலிகளை ஒழிக்க மட்டுமே 5.89 கோடி செலவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் குறைந்தபட்சமாக 2,636 எலிகளை மட்டுமே பிடிக்க முடிந்தது. அதில் 1,715 எலிகள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, தாம்பரம் , ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களிலும் 921 எலிகளை ரெயில்வே பயிற்சி மையத்திலும் பிடித்துள்ளது. அதில் தோராயமாக ஒரு எலியைப் பிடிக்க மட்டுமே 22,334 ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.