வீடுகளுடன் கூடிய அலுவலக அறைகள் 200 சதுர அடிக்கு மேல் இருந்தால் வணிக ரீதியிலான மின்கட்டணம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு


வீடுகளுடன் கூடிய அலுவலக அறைகள் 200 சதுர அடிக்கு மேல் இருந்தால் வணிக ரீதியிலான மின்கட்டணம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 10 Oct 2019 9:11 PM GMT (Updated: 10 Oct 2019 9:11 PM GMT)

வீடுகளுடன் கூடிய அலுவலக அறைகள் 200 சதுர அடிக்கு மேல் இருந்தால் வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்து உள்ளது.

சென்னை,

திருச்சியை சேர்ந்த வக்கீல் சையத் தாஜூதீன் மதன் என்பவர், தனது அலுவலகத்தை நடத்துவதற்காக குடியிருப்பு வளாகத்தின் முதல் தளத்தை வாடகைக்கு எடுத்திருந்தார். அங்கு அவர் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு வணிக கட்டணத்தின் கீழ் மின்சார கட்டணம் கோரப்பட்டது.

இதுதொடர்பாக அவர் மதுரையில் உள்ள சென்னை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மின்சார அதிகாரிகள் தமிழ்நாடு ஒழுங்குமுறை மின்சார ஆணையத்தை அணுகுமாறு கூறியிருந்தது.

வணிக ரீதியிலான கட்டணம்

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் ஆடிட்டர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள், அவர்கள் வசிக்கும் இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அறையை கிளினிக், ஆலோசனை அறை அல்லது அலுவலக அறைகளாக பயன்படுத்தினால், அவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாரம், வீடுகளுக்கு விதிக்கப்படும் கட்டணத்தில் வசூலிக்கப்பட வேண்டும்.

இந்த அலுவலக அறைகள் 200 சதுர அடிக்கு கீழ் இருந்தால் வீடுகளுக்கு விதிக்கப்படும் கட்டணமும், 200 சதுர அடிக்கு மேல் இருந்தால் வணிக ரீதியிலான கட்டணமும் வசூலிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story