மாநில செய்திகள்

5 கிலோ வெள்ளிக்காசுகள் பறிமுதல்தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி + "||" + 5 kg silver coins seized

5 கிலோ வெள்ளிக்காசுகள் பறிமுதல்தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

5 கிலோ வெள்ளிக்காசுகள் பறிமுதல்தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
5½ கிலோ வெள்ளிக்காசுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையொட்டி சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அரசு பொறியியல் கல்லூரி சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 25 மற்றும் 10 கிராம் எடை கொண்ட 414 வெள்ளிக்காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த வெள்ளிக்காசுகளின் மொத்த எடை 5 கிலோ 600 கிராம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.

தாசில்தாரிடம் ஒப்படைப்பு

இதையடுத்து வெள்ளிக்காசுகளுடன் காரில் வந்த 2 பேரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை சூளை பகுதியை சேர்ந்த இந்திரசந்த் மகன் முகேஷ்குமார்(வயது 33), சரவணகுமார் ஆகியோர் என்பதும், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு எந்த வித ஆவணங்களும் இன்றி வெள்ளிக்காசுகளை எடுத்து செல்வதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், திண்டிவனம் தாசில்தார் ரகோத்தமனிடம் ஒப்படைத்தனர்.

ஆம்னி பஸ்சில் பணம் பறிமுதல்

இதேபோல் திண்டிவனம்- மரக்காணம் கூட்டுரோட்டில் திண்டிவனம் தொகுதி பறக்கும் படை அதிகாரி பிரபுசங்கர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

பஸ்சில் பயணம் செய்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மன்னாராம் மகன் கைலாஷ்குமார் (23) என்பவர் எந்த வித ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.