மாநில செய்திகள்

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் சென்னை வந்த 5 பேர் கைது + "||" + Five arrested in Chennai Opposition to visit Chinese prisident

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் சென்னை வந்த 5 பேர் கைது

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் சென்னை வந்த 5 பேர் கைது
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் சென்னை வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,

சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி இன்று அரசு முறை பயணமாக மாமல்லபுரம் வருகின்றனர்.  

சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி வருகையால் மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாமல்லபுரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் சென்னை வந்த கர்மா, சரிங்ராம் ஜியால், சலாம் ராவ் சோர், டென்ஜின் செராப், ஜம்புலிங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.