சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு


சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 11 Oct 2019 5:47 AM GMT (Updated: 11 Oct 2019 5:47 AM GMT)

சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வர இருப்பதையொட்டி, சென்னை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச இருக்கும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

இரு தலைவா்களுக்கு இடையிலான சந்திப்பு, அலுவல்சாரா சந்திப்பு என்பதால் சந்திப்பில் பேசப்படும் விஷயங்கள் பட்டியலிடப்படவில்லை.  இந்தச் சந்திப்பில் பங்கேற்க சீன அதிபா் ஜி ஜின்பிங்  இன்று  பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடி நண்பகல் 12.30 மணிக்கு சென்னை வரவுள்ளார்.

இந்நிலையில்,  சீன அதிபர் ஜி  ஜின்பிங் தங்கும் சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மோப்ப நாய் உதவியுடன் அவர் ஆய்வில் ஈடுபட்டார்.

சென்னை விமான நிலையம் - கிண்டி இடையே உள்ள சாலையோர நடைபாதையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

சீன அதிபர் வருகையையொட்டி பகல் 1.30 மணி முதல் சென்னை விமானநிலையம் முதல், ஐ.டி.சி.  வரையான போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது.

Next Story