மாநில செய்திகள்

ஐந்துரதம் அருகே18 வகையான காய்கறி - பழங்களால் அலங்கார வளைவு + "||" + 18 varieties of vegetables - by fruits Decorative curve

ஐந்துரதம் அருகே18 வகையான காய்கறி - பழங்களால் அலங்கார வளைவு

ஐந்துரதம் அருகே18 வகையான காய்கறி - பழங்களால் அலங்கார வளைவு
சீன அதிபரை வரவேற்க ஐந்துரதம் அருகே 18 வகையான காய்கறிகள்-பழங்களை கொண்ட பிரமாண்ட வரவேற்பு அலங்கார வளைவை அமைக்கப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்,

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் நேற்று கலந்துரையாடினார்கள். சீன அதிபரை வரவேற்கும் விதமாக பிரசித்திபெற்ற மல்லை ஐந்துரதம் அருகே 18 வகையான காய்கறிகள்-பழங்களை கொண்ட பிரமாண்ட வரவேற்பு அலங்கார வளைவை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அமைத்து உள்ளது. இதற்காக காய்கறிகள்-பழங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தோட்டக்கலைத்துறை வரவழைத்து அலங்கார வளைவை அமைத்து உள்ளது.

இந்த அலங்கார வளைவில் பயன்படுத்தப்பட்டுள்ள காய் கறிகள்-பழங்கள் பெரும்பாலானவை இயற்கை வேளாண்மை முறையில் பயிரிடப்பட்ட பண்ணைகளில் இருந்து வரவழைக் கப்பட்டு தோரணம் அமைக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 10 மணி நேரம் பணியாற்றி இந்த அலங்கார வளைவை அமைத்து உள்ளனர். இதுதவிர பாரம்பரியமான வாழை மரங்கள் கடற்கரை கோயில் அருகே வைக்கப்பட்டுள்ளது. மேலும் அலங்காரத்துக்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜாக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தோட்டாக்கலைத் துறை கூடுதல் இயக்குனர் தமிழ்வேந்தன் தெரிவித்தார்.