மாநில செய்திகள்

கோவளம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி + "||" + Narendra Modi: Plogging at a beach in Mamallapuram this morning

கோவளம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி

கோவளம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி
கோவளம் கடற்கரையில் சுமார் 30 நிமிடம் பிரதமர் மோடி துப்புரவுப்பணியில் ஈடுபட்டார்.
சென்னை, 

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று கோவளம் வருகை தருகிறார். இதற்காக கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியுள்ளார். இன்று  இரு தலைவர்களின் சந்திப்பு சற்று நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, கடற்கரையில் இருந்த குப்பைகளை கைகளால் அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். 

சுமார் அரைமணி நேரம் பிரதமர் மோடி துப்புரவுப்பணிகளை மேற்கொண்டார். பொது இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாக வைக்கவும், உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உறுதியேற்போம் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலணி அணியாமல் வெறும் கைகளால் பிரதமர் மோடி குப்பைகளை சேகரிக்கும் பணியை மேற்கொண்டார். தான் சேகரித்த குப்பைகளை ஓட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் வழங்கியதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாதத்தின் டி.என்.ஏ. பாகிஸ்தானிடம் உள்ளது : யுனெஸ்கோவில் இந்தியா பதிலடி
பயங்கரவாதத்தின் டி.என்.ஏ. பாகிஸ்தானிடம் தான் உள்ளது என்று யுனெஸ்கோவில் இந்தியா கடுமையாக சாடியது.
2. காவலாளியே திருடன்; பிரதமருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு
காவலாளியே திருடன் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததற்கு எதிரான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
3. 11வது பிரிக்ஸ் உச்சி மாநாடு; பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டார்
11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
4. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
5. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இன்று பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி
பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார்.