சென்னை கிண்டியில் இருந்து கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.


சென்னை கிண்டியில் இருந்து கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.
x
தினத்தந்தி 12 Oct 2019 4:24 AM GMT (Updated: 12 Oct 2019 5:02 AM GMT)

மோடியை 2-வது நாளாக சந்திக்க சீன அதிபர் ஜின்பிங் கோவளத்திற்கு தனது பிரத்யேக காரில் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை,

சீன அதிபர்  ஜின்பிங் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வருகை தந்தார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி -  ஜின்பிங், நேற்று சந்தித்து பேசினர். தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள கலைச்சிற்பங்களை இருவரும் பார்த்து ரசித்தனர். பின்னர் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை இரு தலைவர்களும் பார்த்தனர். 

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் இரு தலைவர்களும் கண்டு ரசித்தனர்.  இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன அதிபர் ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விருந்து நிகழ்ச்சி முடிவடைந்ததும், சீன அதிபர் ஜின்பிங் அங்கிருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு காரில் சென்றார்.   

இந்த நிலையில், பிரதமர் மோடியை 2-வது முறையாக இன்று சந்திக்க சீன அதிபர் ஜின்பிங், கிண்டி ஓட்டலில் இருந்து,  பிரதமர் மோடி தங்கி இருக்கும் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு  காரில் புறப்பட்டார்.  சீன அதிபருக்கு வழிநெடுக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


Next Story