சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை: எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு..!


சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை: எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு..!
x
தினத்தந்தி 12 Oct 2019 4:58 AM GMT (Updated: 12 Oct 2019 4:58 AM GMT)

இன்று மோடி - சீன அதிபர் சந்திப்பில் எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு உளளது.

சென்னை:

சென்னை கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டார். கிண்டி படேல் சாலை, மத்திய கைலாஷ், ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்று கிழக்குக் கடற்கரை சாலை வழியே கோவளம் பயணம் செய்தார். கோவளத்தில் சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி.

பேட்டரி வாகனத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் உரையாடியபடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.


கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் காலை 10 மணிக்கு தனியாக சந்தித்து பேசுகின்றனர்.

இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேருக்கு நேர் எனக் கூறப்படும் இந்த தனிப்பட்ட சந்திப்பின் போது, எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் ஆழமான விவாதத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து 10.50 மணிக்கு இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அப்போது கலாச்சாரம், வர்த்தகம் உள்ளிட்டவற்றில் இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

இந்தியாவில் சீனா மேற்கொள்ள உள்ள முதலீடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒப்பந்தங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகளை முற்றிலும் நிராகரித்து விட முடியாது.

தொடர்ந்து 11.45 மணிக்கு ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி மதிய உணவளிக்கிறார். பின்னர் 12.45 மணிக்கு கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் இருந்து, சென்னை விமான நிலையத்துக்கு புறப்படுகிறார்.

அங்கிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு தனது இருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு நேபாளம் புறப்படுகிறார்.

Next Story