மாநில செய்திகள்

சந்திப்புக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது:தமிழக அரசுக்கு மோடி-ஜின்பிங் பாராட்டு + "||" + Modi-Jinping applauds Tamil Nadu government

சந்திப்புக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது:தமிழக அரசுக்கு மோடி-ஜின்பிங் பாராட்டு

சந்திப்புக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது:தமிழக அரசுக்கு மோடி-ஜின்பிங் பாராட்டு
பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக தமிழக அரசை மோடி-ஜின்பிங் ஆகியோர் பாராட்டினர்.
சென்னை,

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக தமிழக அரசை மோடி-ஜின்பிங் ஆகியோர் பாராட்டினர், என வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறினார்.

இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நரேந்திர மோடி-ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாட்டை தமிழக அரசு மிகவும் சிறப்பாக செய்து இருப்பதாக ஜின்பிங் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் நெகிழ்ந்து பாராட்டினர்.

மாமல்லபுரத்தில் 3 முக்கிய இடங்களை 2 பேரும் நடந்து சென்றபடி பார்வையிட்டனர். அங்கிருந்த வடிவமைப்புகள், சிற்பங்கள் போன்றவற்றை வியந்து கருத்துகள் பரிமாறிக்கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.