மாநில செய்திகள்

தமிழக உள்ளாட்சி தேர்தல்:அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் பதவிகள் எவை?மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு + "||" + Local Government Elections: State Election Commission Announcement

தமிழக உள்ளாட்சி தேர்தல்:அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் பதவிகள் எவை?மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழக உள்ளாட்சி தேர்தல்:அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் பதவிகள் எவை?மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் பதவிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த தேர்தல் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய 3 அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கவுன்சிலர், மேயர்கள்

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் பதவிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...