மாநில செய்திகள்

மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு + "||" + In Maduravayal To the house of Seaman and the Porur office Strong police security

மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு காரணமாக மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக காவல்துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

சீமானின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமாரிடம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு காரணமாக மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் விவகாரத்தில் அவருடைய கருத்து ஏற்புடையது நடிகர் சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் சீமான் பேட்டி
நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது. அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
2. ஊரடங்கு விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஊரடங்கு விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்-சீமான்
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
4. "முப்பாட்டன் முருகனின் தனித்தன்மை ஒருபோதும் குன்றாது" - சீமான்
உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.