ராஜீவ் காந்தி கொலை குறித்து தான் பேசிய பேச்சை திரும்ப பெறப்போவது இல்லை -சீமான்


ராஜீவ் காந்தி கொலை குறித்து தான் பேசிய பேச்சை திரும்ப பெறப்போவது இல்லை -சீமான்
x
தினத்தந்தி 14 Oct 2019 7:58 AM GMT (Updated: 14 Oct 2019 8:24 AM GMT)

ராஜீவ் காந்தி கொலை குறித்து தான் பேசிய பேச்சை திரும்ப பெறப்போவது இல்லை என்று நாம் தமிழர் கட்சி சீமான் கூறி உள்ளார்.

சென்னை

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக காவல்துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

சீமானின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியதாவது:-

காங்கிரஸ் போராடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கை சட்டபடி  சந்திப்பேன். என் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு இதில் ஒன்றும் இல்லை. இதுபோல் பல வழக்குகளை சந்தித்துவிட்டேன். ராஜீவ் காந்தி குறித்து பேசிய பேச்சை திரும்ப பெற மாட்டேன். இந்த பேச்சால் பொது அமைதிக்கு என்னபங்கம் வந்து விட்டது. இந்த வார்த்தைகள் பழகி விட்டன.

இலங்கையில் அமைதிப்படை என்ன செய்தது என என்னுடன் வாதிட தயாரா?

எந்த மக்கள் பிரச்சினைக்காக காங்கிரஸ் போராடி உள்ளது. இதற்காக போராடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தோளில் விடுதலைபுலிகள் படத்தை பச்சை குத்தி எனது தம்பிகள் சட்டசபைக்கு செல்லும் காலம் வரும். 

தேர்தல் ஆணைய விதியை மீறியதாக கூறமுடியாது. இப்படி பேசனும்  பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில், விதி இருக்கிறதா தேர்தல் எங்கே நடைபெறுகிறது. வெற்றிகள் விலை கொடுத்து வாங்கப்படுகிறது.

 28 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் வாட வைத்து இருப்பதை எப்படி பொறுத்துக்கொள்வது என கூறி உள்ளார்.

Next Story